Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் புதிய வீடு திட்டத்திற்கு …! பிரியங்கா காந்தி கடும் கண்டனம் …!!!

மத்திய ,மாநில அரசிடம் இருக்கும் ஆதாரங்களை ,நோயினால் அவதிப்பட்டு வரும்  மக்களின் உயிரை காப்பாற்ற பயன்படுத்த  வேண்டும் என்று ,பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் தற்போது கொரோனா  தொற்றின்  இரண்டாம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் , தினசரி எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் ,மருத்துவமனைகளில் இடமில்லாமல் தவித்து வருகின்றனர். அதோடு  மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் .

அதில் மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டுள்ள ,  மக்களை காப்பாற்றுவதற்கு தங்களிடம் உள்ள அனைத்து ஆதாரங்களை , பயன்படுத்தி காப்பாற்ற வேண்டும், என்று வலியுறுத்தி உள்ளார். தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவ உபகரணங்கள் ஆக்சிசன் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், சென்ட்ரல் விஷ்டா திட்டத்தில் மூலமாக  பிரதமருக்கு ரூபாய் 13,000 கோடி செலவில் வீடு கட்டுவதற்கு பதிலாக ,மக்களின் உயிரை காப்பாற்றுவதற்காக செலவழிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |