போப் பிரான்சிஸ் சாம்பல் புதன்தினமான இன்று, உக்ரைனில் அமைதி நிலவ பிரார்த்திக்குமாறு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக பெத்லகேமில் இயேசு பிறந்ததாக கிறிஸ்தவ மக்களின் புனிதநூல் பைபிளில் கூறப்பட்டிருக்கிறது. மேலும், அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக 40 தினங்கள் உபவாசம் இருந்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது. அதனை நினைவு கூறும் விதமாக கிறிஸ்தவ மக்கள், 40 தினங்கள் உபவாச நிலையை பின்பற்றுவார்கள்.
இந்த 40 தினங்கள் தவகாலம் என்று கூறப்படுகிறது. இந்த தவக்காலம் தொடங்கக்கூடிய தினம் சாம்பல் புதன். இதனால், சாம்பல் புதனான இன்று, உலக நாடுகளில் இருக்கும் கிறிஸ்தவ தேவாலயங்கள் அனைத்திலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கும். இந்நிலையில், போப் பிரான்சிஸ், இறைநம்பிக்கை கொண்ட மற்றும் நம்பிக்கை இல்லாத அனைத்து மக்களுக்கும் நான் ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன்.
கலவரத்தின் கொடூரமாக இருக்கும் தீமைக்கு உபவாசம், ஜெபம் ஆகிய இறைவனின் ஆயுதங்களால் தான் பதில் தர முடியும் என்று இயேசு நமக்கு கற்று தந்தார். உக்ரைன் நாட்டில் அமைதியை வேண்டி அனைவரும் பிரார்த்திப்போம் என்று தெரிவித்துள்ளார்.