Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“10 நாள் சிறப்பாக நடக்கும்”… ஊரடங்கால் எதுவும் செய்ய முடியல… வீட்டில் வைத்து வழிபாடு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கினால் கோவிலில் பூஜை செய்யாமல் பொது மக்கள் வீட்டிலேயே பொங்கல் வைத்து படையலிட்டு சாமியை வழிபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொத்தமங்கலம் மற்றும் குளமங்கலம் பகுதிகளில் முத்துமாரியம்மன் கோவில் மற்றும் வடக்கு மணிவர்ண  மழைமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் 10 நாட்கள் தொடர்ந்து திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் கொத்தமங்கலத்தில் ஒரே நேரத்தில் வாழவந்த பிள்ளையார், பேச்சியம்மன் மற்றும் முத்துமாரியம்மன் சுவாமிகளுக்கு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் திருவிழா நடத்த முடியாததால் கிராம மக்கள் அவரவர் வீடுகளில் சித்துப் பொங்கல் வைத்து வழிபாடு செய்ய விழா குழுவினர் அறிவித்துள்ளனர். இதனையடுத்து கோவிலில் கூட்டம் கூடாமல் பொது மக்கள் அவரவர் வீடுகளிலேயே பொங்கல் மற்றும் படையல் வைத்து சாமியை வழிபட்டுள்ளனர்.

Categories

Tech |