இந்த ஆண்டு நோம்பு கஞ்சி பள்ளிவாசல்களில் காய்ச்சப்படாது என தலைமை ஹாஜி சலாவுதீன் கூறியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் ரமலான் நோன்பை பாதுகாப்பாக கடைப்பிடிப்பது குறித்து இஸ்லாமிய அமைப்பினருடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் பேட்டியளித்த தலைமைச் செயலாளர், தராவீஹ் சிறப்பு தொழுகையை வீட்டிலேயே நடத்தி கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும் இந்த ஆண்டு நோம்பு கஞ்சி பள்ளிவாசல்களில் காய்ச்சப்படாது என தலைமை ஹாஜி சலாவுதீன் கூறியுள்ளார்.
ரமலான் நோம்பு கஞ்சிக்கான அரிசி அந்தந்த பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். 5,450 மெட்ரிக் டன் பச்சரிசி பள்ளிவாசல்களுக்கு ரமலான் நோம்புக்காக வழங்கப்படும் என்றும் வரும் 19ம் தேதிக்குள் நோம்பு கஞ்சிக்கான அரசி பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தகவல் அளித்துள்ளார். அரிசியை அனைத்து வீடுகளுக்கும் பள்ளிவாசல்கள் பிரித்து வழங்கப்படும், தமிழகத்தில் அந்தந்த மசூதி நிர்வாகிகள், இஸ்லாமியர்கள் வீடுகளுக்கு அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தகவல் அளித்துள்ளார்.
நோன்பு கஞ்சி காய்ச்சிக் கொள்வதற்காக டோக்கன் மூலம் வீடுகளுக்கு அரிசி வழங்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது. மேலும் வீட்டிலேயே தொழுகை நடத்துவது, வீட்டிலேயே நோம்பு கஞ்சி தயாரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே ரமலான் காலத்து தொழுகை அனைத்தும் அவரவர் வீட்டிலேயே நடத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தலைமை ஹாஜி சலாவுதீன் கூறியுள்ளார்.