சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா 38 படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இந்நிலையில் சூர்யா அஜ்மீர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார்.
சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள படம் என்.ஜி.கே. செல்வராகவன் இயக்கிய இந்த படத்தில்,சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் கே.வி.ஆனந்த்தும்,சூர்யாவும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தில் மோகன்லால், ஆர்யா மற்றும் சயீஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சூர்யாவின் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தின் டைட்டில் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் சூர்யா தனது இயக்குனர் சுதா கொங்கராவுடன் அஜ்மீர் தர்காவுக்கு சென்றுள்ளார். இவர்களுடன் இணைந்து 2டி நிறுவன நிர்வாகி ராஜசேகரன் கற்பூரபாண்டியனையும் அழைத்துசென்று பிரார்த்தனை செய்தனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.