அமெரிக்காவில் இனரீதியாக பேசிய பெண்ணை கருப்பினப் பெண் வெளுத்து வாங்கும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது
கலிபோர்னியாவில் இருக்கும் பல்பொருள் ஊஞ்சல் அங்காடி ஒன்றில் இரண்டு பெண்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வெள்ளையினப்பெண் கருப்பினப் பெண்ணை இனரீதியாக விமர்சித்ததால் அவரது முகத்திலேயே குத்தி விட்டார் அந்தப் பெண். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது. வெளியான காணொளியில் வெள்ளையினப்பெண் அதிகமாக excuse me என்ற வார்த்தையை கூறுகின்றார்.
ஆனால் வாக்குவாதம் அதிகரித்த நிலையில் அந்த கருப்பினப் பெண்ணை அவர் இனரீதியாக விமர்சிக்க, ஏற்கனவே ஆத்திரத்தில் கத்தி கொண்டிருந்த அந்த கருப்பினப் பெண் மேலும் கோபம் கொண்டு, மீண்டும் அந்த வார்த்தை சொல்லு பார்க்கலாம் என அந்தப் பெண் மீண்டும் மீண்டும் கத்த உணர்ச்சிவசப்பட்ட வெள்ளையினப்பெண் மறுபடியும் அந்த வார்த்தையை கூறிவிடுகிறார். உடனடியாக கருப்பினப் பெண் அந்த பெண்ணை முகத்தில் சரமாரியாக குத்துகின்றார்.
இதனால் வலி தாங்க முடியாமல் கீழே உட்கார்ந்து நிலையிலும் அந்தப் பெண்ணை கருப்பினப் பெண் கடுமையாகத் தாக்கியதோடு மிகவும் மோசமாக திட்டுகிறார். வீடியோவை பார்ப்பவர்களுக்கு யார் மீது தவறு என்று சொல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. கோபத்தை தூண்டிவிட்ட கருப்பினப் பெண் மீது தவறா ? அல்லது இன ரீதியாக திட்டிய வெள்ளையினப் பெண் மீது தவறா? என்பது புரியாத சூழலே உள்ளது.