தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயிலும் நடைபெற்று வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிக அளவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அரபிக் கடலில் டவ்-தே புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.
அதுமட்டுமில்லாமல் கன்னியாகுமரி மாவட்டத்தில் அபாய அளவை தாண்டி நீர்ப்பெருக்கு சென்றதாகவும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும் கூறப்பட்டது. இந்நிலையில் டவ்-தே புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். வருவாய் பேரிடர் மேலாண்மை செயலாளர் அதுல்யா மிஸ்ரா மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலு சந்திரனுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.