Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஐடி வேலை போச்சு….. கணவனோடு ஆடு திருடிய கர்ப்பிணி பெண்….. சென்னை அருகே சம்பவம்…!!

சென்னை  அருகே ஊரடங்கும் வேலை இல்லாததால் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஆடு திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டம் எண்ணூர் பகுதிக்கு உட்பட்ட மீனவ கிராமங்களான ஆலங்குப்பம், நெட்டுகுப்பம், எண்ணூர்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி ஆடுகள் மாயமாகியுள்ளன. ஆடு வளர்த்து வந்த உரிமையாளர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு என்பதால்,

பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வராமல் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. இதை பயன்படுத்தி நிறைமாத கர்ப்பிணியான காவேரியும், அவரது கணவரும் இருசக்கர வாகனத்தில் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருக்கும் வழியில், சாலையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஆட்டை கமுக்கமாக தூக்கி தப்பிச் செல்ல முயன்றனர். இதை கண்ட அப்பகுதி இளைஞர்கள் அவர்களை உடனடியாக மடக்கிப் பிடித்து எண்ணூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின் அதிகாரிகள் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கர்ப்பிணி பெண் காவேரி ஐடி ஊழியராக வேலை பார்த்து வந்ததும், அவரது கணவர் கார்த்தி என்பவர் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இருவரும் ஊரடங்கு காலத்தில் வேலை இழந்ததால் வருமானத்திற்கு வழி இல்லாமல்,

கூட்டாக சேர்ந்து ஆடுகளை திருடிவிற்று பிழைப்பு நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. மேலும் ஒரு ஆடு ஒன்றுக்கு ரூபாய் 3 ஆயிரம் வருமானம் கிடைத்ததால், இதே வேலையில் தொடர்ந்து ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Categories

Tech |