Categories
தேசிய செய்திகள்

“மாரத்தானில் கர்ப்பிணி சாதனை” 10 கி. மீ, 62 நிமிடங்களில்…. குவியும் பாராட்டு…!!

மாரத்தான் போட்டியில் கர்ப்பிணி பெண் ஒருவர் 62 நிமிடத்தில் ஓடி சாதனை படைத்துள்ளது பாராட்டுகளை பெற்றுள்ளது.

பெங்களூரில் டிசிஎஸ் நடத்திய 10 கிலோமீட்டர் மராத்தான் போட்டியில் பலர் ஆர்வமாக கலந்து கொண்டுள்ளனர். இதில் அங்கிதா என்ற ஐந்து மாத கர்ப்பிணி பெண் ஒருவர் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டியில் அவர் ஆரம்பம் முதல் இறுதி வரை சுறுசுறுப்பாக ஓடியிருக்கிறார். மேலும் 10 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 62 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 5 மாத கர்ப்பிணியாக இருந்த இவர் தைரியமாக மன உறுதியுடன் ஓடி சாதனை படைத்துள்ளார்.

இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டதோடு மேலும் புதிய சாதனையை செய்துள்ளது பாராட்டுகளை பெற்றுள்ளது. இவருடைய சாதனைக்கு பல நெட்டிசன்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த சாதனை மற்ற கர்ப்பிணி பெண்களை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மாரத்தான் போட்டியில் ஐந்து மாத கர்ப்பிணி ஒருவர் கலந்து கொண்டிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |