ஆலியா மானசா கர்ப்பமானதால் ராஜா ராணி சீரியல் குழுவினர் எடுத்த முடிவு பற்றி தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”ராஜா ராணி”. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ஆலியா மானசா. இவர் தற்போது இந்த சீரியலின் இரண்டாவது சீசனிலும் நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலின் முதல் சீசனில் நாயகனாக நடித்த சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், இவர் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் தெரிவித்தார். மேலும், இந்த தகவலை ராஜா ராணி சீரியல் குழுவினரிடம் இவர் கூறியுள்ளார். அதற்கு சீரியல் குழுவினர் இந்த சீரியலில் இருந்து உங்களை நீக்க வேண்டாம். ஆனால், அதற்கு தகுந்தவாறு கதை அமைப்பை மாற்றி அமைக்கலாம் என கூறியதாக அவர் தெரிவித்தார்.