காதலித்த பெண் கர்ப்பம் ஆனதால் அவரை கழட்டி விட பெண்ணின் மீது ஆசிட் வீசிய இளைஞனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் பாடான் மாவட்டத்தில் 22 வயதான கல்லூரியில் படிக்கும் பெண், மகேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்துள்ளனர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியிடம் நெருங்கி பழகி உள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பமுற்ற பெண் தன்னுடைய காதலன் மகேஷிடம் தன் கற்பதற்கு நீ தான் காரணம் என்றும், நாம் உடனே திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் கேட்டுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மகேஷ் அந்த காதலியிடம் தான் விரைவில் திருமணம் செய்து கொள்கிறேன் என்று அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். அதன்பிறகு அவரை தவிர்க்க தொடங்கியுள்ளார். போன் செய்தாலும் எடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் அந்த பெண் பலமுறை அவரை சந்திக்க முயற்சி செய்தும் முடியவில்லை.
இந்நிலையில் மகேஷ் கர்ப்பமான காதலியை கழற்றிவிட முடிவு செய்து புதன்கிழமை அன்று அந்தப் பெண் கல்லூரியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது ஆசிட் கலந்த ஒரு திரவப் பொருளை அந்தக் காதலி மீது வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அந்த பெண் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன்பின்னர் அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் அந்த பெண்ணின் காதலன் மகேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். விரைவில் குற்றவாளியை கைது செய்வோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.