Categories
உலக செய்திகள்

முகப்பருக்களுக்கு மருந்து எடுத்த கர்ப்பிணி பெண்… பக்க விளைவுகளால் ஏற்பட்ட துயரம்…!!!

ஸ்விட்சர்லாந்து நாட்டில் கர்ப்பமாக இருந்த பெண் முகத்தில் இருந்த பருக்களுக்கு மருந்து எடுத்தது, அவரின் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தன் முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்குவதற்காக  சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அந்த சமயத்தில் அவர் கர்ப்பம் தரித்திருக்கிறார். அதன்பிறகு, அவருக்கு குழந்தை பிறந்து விட்டது. இந்நிலையில், தன் குழந்தை வாய் பேச முடியாமல் இருப்பதாகவும், கற்பதில்  குறைபாடு இருப்பதாகவும் கூறி, தனக்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் மீது அந்த பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

நீதிமன்றத்தில் அந்த பெண், மருத்துவர்கள் அந்த மருந்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் அந்த மருந்தை எடுத்துக் கொண்டால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும்? என்று அனைவரும் நன்கு அறிந்திருப்பார்கள்.

எனவே, மருத்துவர்கள் தனக்கு தெரியப்படுத்தவில்லை என்று அந்த பெண் கூறியதை நீதிபதிகள் ஏற்கவில்லை. இது மட்டுமில்லாமல் பருக்கள் நீங்க மருந்து உட்கொள்ளும் முன் ஒரு நபர் கர்ப்பமாக உள்ளாரா? என்பதற்கு பரிசோதனை மேற்கொள்வது வழக்கத்தில் இருக்கிறது. எனவே, உச்சநீதிமன்றம் அந்த பெண்ணின் வாதத்தை ஏற்க மறுத்துவிட்டது.

Categories

Tech |