விபத்தில் சிக்கிய கர்ப்பிணி மனைவியின் நாடித்துடிப்பை பரிசோதித்து கணவர் அலறியது அனைவரது மனதையும் நொறுக்கியுள்ளது
கலிபோர்னியாவை சேர்ந்த தம்பதி எசேணியா மற்றும் ஜேம்ஸ் இரண்டு வருடங்களாக குழந்தை இன்றி தவித்து வந்தனர். கடைசியாக எசேணியா கர்ப்பமாக இருந்த நிலையில் தனது கணவருடன் சேர்ந்து வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென வந்த கார் எசேணியா மீது மோதியது. இதில் ரத்த வெள்ளத்தில் எசேணியா சரிய அவரது நாடித்துடிப்பை பரிசோதித்த ஜேம்ஸ் கதறியதை பார்த்தவர்கள் அதை மறக்கவே முடியாத அதிர்ச்சி என தெரிவிக்கின்றனர்.
மருத்துவமனைக்கு கொண்டு சென்று எசேணியா வயிற்றில் இருந்த குழந்தை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் மருத்துவர்களால் காப்பாற்ற இயலவில்லை. இதனிடையே எசேணியா மீது காரை ஏற்றிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே போக்குவரத்துக் எதிரான குற்றங்களில் ஈடுபட்டதால் இவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு இருந்தது. அதோடு விபத்து நடந்த சமயம் அவர் போதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது. அவருக்கும் விபத்தில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மேலும் அவர் மீது கொலைக் வழக்கு பதிவு செய்யப்படலாம் என நம்பப்படுகிறது.