Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஐயோ! அவளுக்கு என்னாச்சு…. பரிசோதனையின் போது இறந்த கர்ப்பிணி பெண்… கதறி அழுத குடும்பத்தினர்… சென்னையில் பரபரப்பு…!!

திருமணமான ஒரு வருடத்தில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற கர்ப்பிணி பெண் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகர் 2வது தெருவில் தமிழ்மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பி.காம் பட்டதாரியான வைஷாலி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ள வைஷாலி திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் தனது கணவர் மற்றும் தாயார் சரளாவுடன் வைஷாலி உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது வைஷாலிக்கு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கப்பட்டதால் விஷாலின் தாயார் சரளா மற்றும் கணவர் தமிழ்மணி வெளியில் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து வெளியே வந்த மருத்துவர்கள் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுய நினைவின்றி மயங்கி விழுந்த வைஷாலி இறந்துவிட்டதாக அவரது கணவர் தமிழ்மணியிடம் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்து கதறி அழுதபடி திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் தனது மனைவி மருத்துவமனையின் கவன குறைவால் மட்டுமே இறந்துள்ளதாக தமிழ்மணி புகார் அளித்து விட்டார்.

அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த திருமுல்லைவாயல் போலீசார் வைஷாலியின் உடலை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் மட்டுமே ஆவதால் திருவள்ளூர் ஆர்.டி.ஓ விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. அதோடு பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் கர்ப்பிணி பெண்ணின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |