போச்சுக்கல் நாட்டில் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணி பெண், இடம்பற்றாகுறையால் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் பாதி வழியில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த 34 வயதுடைய ஒரு பெண் போர்ச்சுக்கலுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். கர்ப்பிணி பெண்ணான அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. எனவே, அவரை பிரபல மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த மருத்துவமனையில் பிரசவ பிரிவில் இடம் இல்லை.
எனவே, வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அந்த பெண்ணிற்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் பலியானார். இதற்கு முன்பும், இதே போன்று மருத்துவமனையில் இடம்பற்றாக்குறை காரணமாக இரண்டு கர்ப்பிணி பெண்கள் வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டபோது குழந்தைகளோடு உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணும் உயிரிழந்ததால், அந்நாட்டு சுகாதாரத்துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.