Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இவ்ளோ விலைக்கு வாங்கனுமா….? நிறைமாத கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ராயர் அக்ரஹாரம் பகுதியில் சிலம்பரசன் என்ற லாரி ஓட்டுனர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் மகள் இருக்கிறார். தற்போது சூர்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் 16 ஆயிரம் ரூபாய்க்கு புதிய செல்போன் வாங்கிய சிலம்பரசனை சூர்யா கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் சூர்யா கோபத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அதன்பின் மன உளைச்சலில் இருந்த சூர்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சூர்யாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |