சென்னை ராஜாஜி மருத்துவ மனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்படவில்லை.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதில் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் காட்டிலும் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவது மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது. சென்னையில் இதுவரை 191 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில், ராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுகளில் ஒன்றுக்கு கூட கொரோனா உறுதி செய்யப்படவில்லை. ராஜாஜி மறுத்தவமனை மருத்துவர்களின் இந்த சிகிச்சைக்கு மத்திய அரசு தற்போது பாராட்டுக்களை தெரிவித்து வருகிறது. இடைவிடாது உழைக்கும் மருத்துவ ஊழியர்களுக்கும், மருத்துவர்களுக்கும் தன்னார்வலர்கள் இலவச உணவை ராஜாஜி மருத்துவமனையில் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.