கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேடு பகுதியில் ஜவுளி வர்த்தகரான சஞ்சய் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிந்துஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 வயதில் மகன் இருக்கிறான். தற்போது சிந்துஜா 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் வீட்டில் இருக்கும் ஒரு அறையில் சஞ்சய் தனது மகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மற்றொரு அறையில் தூக்கு போடுவது போல சிந்துஜா செல்போனில் புகைப்படம் எடுத்து தனது கணவருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சஞ்சய் அந்த அறையின் கதவை உடைத்து தூக்கில் தொங்கிய சிந்துஜாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிந்துஜாவை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிந்துஜாவின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.