கர்ப்பிணி பெண் ஒருவரின் கர்ப்ப பரிசோதனையில் குழந்தை கட்டை விரலை தூக்கி காட்டியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் வசிக்கும் ஹாலி கில்ஸ் (33) கர்ப்பிணி பெண்ணான இவர் lincolnshire ல் இருக்கும் horn castle என்ற மருத்துவமனைக்கு கர்ப்பத்திற்கான பரிசோதனை செய்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது ஸ்கேனில் அவருக்கு குழந்தையின் உருவம் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. அதில் சிறிதும் எதிர்பாராத வகையில் குழந்தை தன் கட்டை விரலை உயர்த்திக்காட்டியுள்ளது. இது நம்ப முடியாத வகையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
மேலும் இதுபற்றி அவர் கூறுகையில் தன் நண்பர் ஒருவருடன் பரிசோதனைக்கு சென்றேன். அப்போது பரிசோதித்த மருத்துவர் தீடிரென ஓ மை காட் என்றார். உடனே நாங்கள் திரையை பார்த்தோம். அது எங்களை மிகவும் பிரமிக்க செய்தது என்று கூறியுள்ளார். மேலும் தான் 16 வயதிலேயே தாயை இழந்ததாகவும் அதனால் தனக்கு இது கடினமான அனுபவமாகவே இருந்தது. மேலும் அந்த சிறிய அசைவும் மிகவும் அழகாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் குழந்தையை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் அது நிச்சயம் என் அம்மாவின் பரிசாக தான் இருக்கும் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.