இங்கிலாந்தில் பிரசவத்தின்போது, 10 சதவீதம் பெண்கள் புகைபிடிப்பவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு புதுவித அறிவிப்பை NHS விடுத்துள்ளது.
கர்ப்பிணி பெண்கள் புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கு ஏதேனும் ஒரு நிதி சலுகை போன்றவற்றை அவர்களுக்கு கொடுத்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இங்கிலாந்து நாட்டின் சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் NHS கர்ப்பிணி பெண்கள் புகை பிடிப்பதை நிறுத்துவதற்காக சுமார் 400 பவுண்டு வரை மதிப்புடைய ஷாப்பிங் வவுச்சரை ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
ஆனால் கர்ப்பிணி பெண்கள் வவுச்சரை பெறுவதற்கு முன்பாக புகைப்பிடிப்பதை நிறுத்தி விட்டார்கள் என்பதை நிரூபணம் செய்வதற்கு அவர்கள் உயிர் வேதியல் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையையும் NHS முன்வைத்துள்ளது. இதன் விளைவாக குறைந்தபட்சமாவது கர்ப்பிணி பெண்கள் புகைப்பிடிப்பதை நிறுத்தி விடுவார்கள் என்று ஆராய்ச்சி கூறுகிறது.