செய்முறை..
அரிசி – 250 கிராம்
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் – 2
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – 100 மில்லி
கடுகு – சிறிதளவு
கடலைப்பருப்பு – சிறிதளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை..
ஒரு பங்கு அரிசிக்கு நான்கு பங்கு தண்ணீர் என்ற விகிதத்தில் எடுத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து கொள்ளவும். அதில் அரிசியைப் போட்டு தேவையான உப்பு சேர்த்து குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும் .சாதம் வெந்து நன்கு குழைந்து இருக்கும். கடாயில் எண்ணெய் விட்டு. கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு ,பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், போட்டு தாளித்து. வெந்த சாதத்துடன் கலந்து நன்கு மசிக்கவும் .சுவையான புளி பொங்கல் தயார்