பொதுவாக கருவுற்றிருக்கும் கர்ப்பிணி பெண்கள் மாதுளம்பழம் சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பது உண்டு. அதே போல வீட்டிலுள்ளவர்கள் சொல்வார்கள். ஒரு தாய் தன்னுடைய கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு மாதுளையை ஜூஸ் செய்து குடித்தாலோ அல்லது அப்படியே சாப்பிட்டாலும் கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இப்போது பார்க்கலாம்.
மாதுளையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் குழந்தை குறை பிரசவத்தில் பிறப்பதை தடுக்க முடியும்.
ஒவ்வொரு நாளும் தேவையான வளர்ச்சி இதன் மூலம் கிடைக்கிறது.
தொப்புள்கொடியில் ஏற்படும் தொற்றை தடுக்கிறது.
மாதுளை சாற்றில் பாலிபீனாலிக் அமிலம் இருப்பதால் கருச்சிதைவை தடுக்கிறது.
எதாவது காரணத்தால் குழந்தைக்கு ஆக்சிஜன் குறைவாக கிடைக்கும் போது அதை தாயின் உடலில் உள்ள மாதுளம்பழ சத்து சரி செய்து விடுகிறது.
78 தாய்மார்கள் 23 முதல் 44 வார கர்ப்ப காலத்தில் மாதுளம் பழ ஜூஸ் கொடுத்து ஆராய்ச்சி செய்ததில் மாதுளை ஜூஸ் கொடுத்த தாயின் கருவில் வளரும் குழந்தையின் மூளையில் ரத்த ஓட்டம் சீராக இருப்பது தெரியவந்துள்ளது. எனவே கர்ப்பிணி பெண்கள் தங்களின் கர்ப்ப காலத்தில் மாதுளம் பழத்தை சாப்பிட்டு குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.