பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் கடந்த வாரத்தில் மட்டும் 90-க்கும் மேற்பட்ட வீரர்கள், பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் சில போட்டிகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் லிவர்பூல்-லீட்ஸ் மற்றும் வோல்வ்ஸ்-வாட்போர்டு அணிகளுக்கிடையேயான ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் – லீட்ஸ் யுனைடட் அணிகள் மோத இருந்தது .அதேபோல் மற்றொரு ஆட்டத்தில் வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரெர்ஸ் – வாட்போர்டு அணிகள் விளையாட இருந்தது .இந்நிலையில் கிளப் அணி வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது .
இதற்கு முன்னதாக கடந்த சனிக்கிழமை நடக்க இருந்த பர்ன்லி-ஆஸ்டன் வில்லா அணிகளுக்கிடையேயான போட்டியும் கொரோனா தொற்று எதிரொலி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது . இதேபோல் கடந்த வாரம் நடக்க இருந்த 10 போட்டிகளில் 6 போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற காணொளி வாயிலான கூட்டத்தில் அனைத்து கிளப் அணிகளும் ஒருமனதாக பிரீமியர் லீக் போட்டிகளை தொடர்ந்து நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.