கொரோனா தொற்று எதிரொலி காரணமாக பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் இன்று நடைபெற இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ப்ரென்ட்போர்டு – மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோத இருந்தது . ஆனால் கொரோனா தொற்று எதிரொலி காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது .இதில் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் வீரர்கள் மற்றும் சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் போட்டி ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுக்குறித்து பிரீமியர் லீக் சார்பில் வெளியிட்ட அறிக்கையில்,’மான்செஸ்டர் யுனைடெட் அணியில் வீரர்கள் மற்றும் சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஆனால் மருத்துவ ஆலோசகர்களின் வழிகாட்டுதல்படி இன்று நடைபெற இருந்த போட்டி ரத்து செய்யப்படுகிறது ‘இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.