பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் அர்செனல் அணி வெற்றி பெற்றுள்ளது .
பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் அர்செனல் -வெஸ்ட் ஹாம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடினார் .ஆனால் இரு அணிகளும் முதல் பாதி ஆட்டத்தில் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து 2-வது பாதி ஆட்டத்தில் அர்செனல் அணியில் கேப்ரியல் மார்டினெல்லி 48-வது நிமிடத்திலும் ,எமைல் ஸ்மித் 87-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.
இதனால் அர்செனல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எதிரணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணானது . இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணி வெற்றி பெற்றது.