Categories
கால் பந்து விளையாட்டு

பிரீமியர் லீக் கால்பந்து: கொரோனா தொற்று அச்சுறுத்தல் …. 103 பேருக்கு கொரோனா உறுதி ….!!!

பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில்  பங்குபெறும் வீரர்கள் மற்றும் பணியாளர்கள்  103 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

இங்கிலாந்தில் நடந்து வரும் பிரபல கால்பந்து போட்டியான பிரீமியர் லீக் போட்டி கொரோனா  பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்று வந்தது .அதோடு போட்டியில் பங்கு பெறும் வீரர்கள் மற்றும் மைதான ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி கடந்த வாரம் வீரர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 15,189 பேருக்கு ஒரு பரிசோதனை நடத்தப்பட்டது . இதில் 103 பேர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று நடைபெற இருந்த அர்செணல்-வோல்வ்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதில் வோல்வ்ஸ் அணியில்  பெரும்பாலான வீரர்களுக்கு  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாலும் ,அணியில் மாற்று வீரர்கள் போதிய அளவில் இல்லாததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் கொரோனா தொற்று பரவல்  காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 15-வது போட்டி இதுவாகும்.

Categories

Tech |