130க்கும் மேற்பட்ட பிரபலங்களின் டுவிட்டரை 21 வயது இளைஞன் ஹேக் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
சென்ற புதன்கிழமை அன்று 130க்கும் மேலான முக்கிய பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் அனைத்தும் ஹேக் செய்யப்பட்டு கணக்கில் கிரிப்டோகரன்சி மற்றும் பிட்காயின் போன்ற மோசடிப்பதிவுகள் பகிரப்பட்டுள்ளன. இத்தகைய டுவிட்டர் கணக்குகளின் மூலம் ஒரு லிங்க் கொடுத்து, அதன் மூலம் அனுப்பப்படும் பணம் இருமடங்காக திருப்பி அனுப்பப்படும் என பதிவிட்டுள்ளனர். இதில் ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மாஸ்க், ஜோ பீடன், மைக் ப்ளூம்பெர்க், அமேசான் நிறுவனம் ஜெஃப் பெசோஸீ, பிளாய்ட் மெவேதர் மற்றும் கிம் காதர்சியான் போன்ற உலகிலுள்ள பல்வேறு பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனம் பல்வேறு போராட்டத்திற்கு பிறகு நிலைமையை கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்தது . இத்தகைய ஹேக்கிங் மூலம் பிட்காயின் வாலட்டில் 300 பரிவர்த்தனைகளுக்கு மேல் செயல்படுத்தப்பட்டு 75 லட்சத்திற்கும் மேலான பணத்தொகையை ஹேக்கர்கள் கைப்பற்றியுள்ளனர்.
எப்.பி.ஐ விசாரணையை மேற்கொண்ட நிலையில் தற்போது இத்தகைய ஹேக்கிங் தாக்குதல் பற்றிய பல்வேறு தகவல்கள் கிடைத்திருக்கின்றன. சைபர் செக்யூரிட்டி குழு அறிந்த தகவல்படி ப்ளக்வாக்ஜோ என்ற ஹேக்கர் இவ்வாறான பெரிய ஹேக்கிங் சம்பவத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன. இவர் இதற்கு முன்னரே பல்வேறு இணைய குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ளக்வாக்ஜோ என்ற ஹேக்கர் இருபத்தோரு வயது ஜோசப் ஜேம்ஸ் ஹானர் என்ற இளைஞன் என்பதும், அவர் லண்டன் லிவர்பூல் பகுதியினை சார்ந்தவர் என்றும் ஸ்பெயினில் தற்போது வசித்து வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இத்தகைய ஹேக்கிங் பற்றி அனைத்து விபரங்களையும் விரைவில் சேகரித்து விடுவோம் என சைபர் பாதுகாப்பு குழு முழுமையாக கூறியுள்ளது.