Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கில் 4 பேருக்கு 20ஆம் தேதி தூக்கு… திகார் சிறைச்சாலையில் ஏற்பாடுகள் தீவிரம்!

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 20ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற பட இருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் திகார் சிறைச்சாலையில் தீவிரமாக நடைபெறுகின்றன. 

தலைநகர் டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஓட்டுநர் ராம்சிங், அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் ஓட்டுநர் ராம்சிங் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டான். மேலும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த சிறுவன் 3 ஆண்டு சிறைத்தண்டனைக்கு பிறகு விடுவிக்கப்பட்டான். இந்நிலையில் மீதமுள்ள குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

Image result for Pawan Jallad

ஆனால் குற்றவாளிகள் நால்வரும் தங்களுக்குரிய சட்ட வாய்ப்புகளை பயன்படுத்தியதால் 3 முறை தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியில் வருகின்ற 20 ஆம் தேதி காலை 5: 30 மணிக்கு  அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய நால்வரையும் தூக்கிலிட டெல்லி நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து உத்தரபிரதேசம் மீரட் நகரை சேர்ந்த தூக்கில் போடும் நபரான பவன் ஜல்லட் என்பவரை திகார் சிறை அதிகரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் டம்பி பொம்மைகளை வைத்து தூக்கில் போடுவதற்கான ஒத்திகை நடத்தவும் சிறை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இதற்கிடையே முகேஷ் சிங் என்ற குற்றவாளி தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |