Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி தயார்… ரஷ்யாவிடம் இருந்து வாங்க மத்திய அரசு ஆலோசனை…!!

ரஷ்யாவில்  தயாரித்திருக்கும் கொரோனா தடுப்பு மருந்தை பெறுவதற்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரஷ்யா நாட்டில் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கி அதனை பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.  மேலும் கொரோனா தடுப்பூசி மருந்து செப்டம்பர் முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என ரஷ்யா அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ரஷ்யாவில் தயாரித்திருக்கும் கொரோனா வைரஸ்கான தடுப்பூசி பெறுவது தொடர்பாக மத்திய அரசு அமைத்த தேசிய நிபுணர் குழு நாளை ஆலோசனை நடத்த இருப்பதாகவும், மாநில அரசுகள், தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் தேசிய நிபுணர் குழு தொடர்பில் இருக்கும் எனவும், இது பற்றி தேசிய நிபுணர் குழு நாளை கூடி ஆலோசித்து முடிவு எடுக்கும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |