அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், ஜோபைடன் ஆதரவாளர்கள் புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளனர்.
அமெரிக்க நாட்டின் அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வெற்றிபெற 270 பிரதிநிதிகளின் வாக்குகள் தேவை. இந்நிலையில் தற்போதைய வாக்கு நிலவரப்படி ஜோ பைடன் 264 வாக்குகளும், குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் 114 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதையடுத்து வாக்கு எண்ணிக்கை “நாம் தான் வெற்றி பெறுவோம்” என்று ஜோ பைடன் அவரின் ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இதைதொடர்ந்து அவரின் ஆதரவாளர்கள் “Presidensial Trasition” என்ற இணையதளத்தை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக யார் இருப்பார்கள் என்பதை மக்கள் தீர்மானிக்கும் வகையில் buildbackbetter.com என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் தற்போது வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஜோ பைடன் ஜனாதிபதியாக பொறுப்பேற்று நிர்வகிக்கும் முதல் நாள் trnasition குழு முழு வேகத்தில் தொடர்ந்து தயாராகும் என்று இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர வேறு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.