Categories
உலக செய்திகள்

டென்னிசியில் சூறாவளி தாக்குதல்… சேதமடைந்த பகுதியில் அதிபர் டிரம்ப் ஆய்வு!

அமெரிக்காவின் டென்னிசி (Tennessee) பகுதியில் சூறாவளி தாக்கியதில் கடுமையான சேதமடைந்த இடங்களை அதிபர் டொனால்ட் டிரம்ப்  பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

அமெரிக்காவின் டென்னிசி பகுதியில் கடந்த 3 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அடுத்தடுத்து வேகமாக சூறாவளி  தாக்கியது. மிக வேகமாக சுழன்று அடித்த சூறாவளியால் டென்னிசி பகுதி நிலைகுலைந்து சின்னாபின்னாமாக தற்போது காட்சியளிக்கிறது. இந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர்.

Image result for President Donald Trump has inspected the tornadoes in the Tennessee area of ​​the United States.

அங்கு இருந்த ஏராளமான வீடுகளின் கூரைகள் சூறாவளியின் தாக்கத்தால் பிய்த்து எறியப்பட்டு கிடக்கின்றன. இதனால் மக்கள் வீடுகளில் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Image result for President Donald Trump has inspected the tornadoes in the Tennessee area of ​​the United States.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த பகுதியை  நேரில் சென்று பார்வையிட்டார். அதை தொடர்ந்து சூறாவளி காற்றால் வீடுகளை இழந்து தவிப்போரையும், பத்திரமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களையும்  டிரம்ப் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Categories

Tech |