Categories
உலக செய்திகள்

பிரேசிலில் பரபரப்பாக தொடங்கிய தேர்தல்…. மீண்டும் வெற்றியடைவாரா அதிபர்…?

பிரேசில் நாட்டில் அதிபர் தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய அதிபர்  மீண்டும் போட்டியில் இருப்பதால் அவர் வெற்றியடைவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

பிரேசில் நாட்டில் இன்று அதிபர் தேர்தல் பரபரப்பாக தொடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் ஜெயீர் போல்சனரோ, களமிறங்கியிருக்கிறார். அவருடன் சேர்த்து 9 நபர்கள் அதிபர் போட்டியில் இருக்கிறார்கள்.

ஜெயீர் போல்சனரோ ஆட்சியில், அவரின் அரசாங்கம் கொரோனா பரவலை கையாண்ட விதம், அமேசான் காடுகள் அழிக்கப்பட்டது போன்ற பல பிரச்சனைகளில் அவர் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவரின் அரசு அதிக விமர்சனங்களை சந்தித்தது. எனவே, இந்த தேர்தலில் அவருக்கான வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாக அமைந்திருக்கிறது.

Categories

Tech |