Categories
உலக செய்திகள்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…. மனைவியுடன் வெள்ளைமாளிகையை அலங்கரித்த ஜோ பைடன்…!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் தன் மனைவியுடன் கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து அலங்கரித்து புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

உலக நாடுகளில் கிறிஸ்தவ மக்கள் இன்று இயேசு கிறிஸ்துவின் பிறப்பான கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக வருடந்தோறும் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக நடைபெறும். ஆனால், இந்த வருடத்தில் பனிப்புயலால் அமெரிக்க மக்கள் தங்கள் குடியிருப்புகளிலேயே எளிமையாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், தன் மனைவியுடன் வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து அலங்கரித்த புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். மேலும், இன்னும் சில பணிகள் மட்டுமே மீதமுள்ளன. இந்த கிறிஸ்துமஸ் நாள் சிறப்பானதாக உங்களுக்கு அமையும் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |