அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்கு பேருக்கு அதிபர் ஜோ பைடன் உயர் பதவியினை வழங்கியுள்ளார்.
அமெரிக்காவில் இந்தியர்களை கவுரவப்படுத்தும் விதமாக அதிபர் ஜோ பைடன் தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு உயர் பதவியை வழங்கி வருகிறார். அந்த வகையில் தற்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்கு பேருக்கு ஆசிய அமெரிக்கர்கள், பசுபிக் தீவு மற்றும் பூர்வீக ஹவாய் மக்கள் குறித்த ஆலோசனைக் குழுவில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதிபர் ஜோ பைடன் பசிபிக் தீவு, பூர்வீக ஹவாய் மற்றும் ஆசிய அமெரிக்கர்கள் குறித்த ஆலோசனைக் குழுவில் 23 பேரை உறுப்பினர்களாக நியமித்துள்ளார் என்று வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
அதில் நான்கு பேர் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். அதாவது இந்திய வம்சாவளியை சேர்ந்த சோனால் ஷா, ஸ்திதா ஷா, கமல் கால்சி, அஜய் ஜெயின் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம் பெறுகின்றனர். இந்த குழுவானது பசிபிக் தீவு, ஆசிய அமெரிக்க மற்றும் பூர்வீக ஹவாய் மக்களின் சம உரிமை மற்றும் மேம்பாடு குறித்த ஆலோசனைகளை அதிபருக்கு வழங்கும் என்று கூறப்படுகிறது.