அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மறைந்த தனது முதல் மனைவி மற்றும் குழந்தையின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கடந்த 1972-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் மரத்தை எடுப்பதற்காக அதிபர் ஜோ பைடனின் முதல் மனைவி நீலியா பைடனும் அவருடைய குழந்தைகளும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக நடந்த கோர விபத்தில் நீலியா பைடனும், அவரது மகள் நவோமியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆனால் அவருடைய மற்ற இரண்டு குழந்தைகளான மூன்று வயதுடைய Hunter Biden மற்றும் நான்கு வயதுடைய Beau Biden ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர். இந்த நிலையில் அதிபர் ஜோ பைடன் தனது முதல் மனைவிக்கும், கைக்குழந்தையாக இருந்த மகளுக்கும் 49-ஆவது ஆண்டு நினைவு நாளில் அஞ்சலி செலுத்துவதற்காக டெலாவேர் மாநிலத்தில் உள்ள செயின்ட் ஜோசப் பிராண்டிவைன் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்திற்கு சென்றுள்ளார்.
ஆனால் அவருடைய முதல் மனைவியின் உயிரிழப்பிற்கு பிறகு ஜோ பைடன் 1977-ஆம் ஆண்டு ஜில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு தற்போது ஆஷ்லே என்ற மகளும் உள்ளார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று ஜோ பைடன், அவரது இரண்டாவது மனைவி ஜில் பைடன் மற்றும் மகள் ஆஷ்லே ஆகியோர் தேவாலயத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.