ஹைதி நாட்டில் அதிபர் கொலை செய்யப்பட்டதால், வன்முறை ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனல் மாய்சேவை, மர்ம கும்பல் அவரின் இல்லத்தில் வைத்தே துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதில் அவரின் மனைவி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் அதிபரின் கொலைக்கு காரணமான, வெளிநாட்டு கூலிப்படையினர் 28 பேரை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
அவர்களை கைது செய்வதற்காக அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டபோது கூலிப்படையை சேர்ந்த மூவரை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர். மேலும் 17 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள எட்டு நபர்கள் தப்பிவிட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுக்க மக்கள் மீது வன்முறைகள் நடத்தி வருகிறார்கள்.
இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பெற முடியாமல், தவித்துவருகிறார்கள். பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் பற்றாக்குறை ஏற்பட்டதால் அடைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டு வரும் இந்த நிலை தொடர்பில் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுக்கூட்டம் நடந்த போது, ஐநாவின் ஹைதி தூதரான ஆண்டோனியோ ரோட்ரிக் என்பவர், நாட்டின் இந்த நிலைக்கு உலகிலுள்ள பிற நாடுகள் உதவ வேண்டும் என்றார்.
எனவே அமெரிக்க தூதரன லிண்டா தாமஸ், ஹைதி நாட்டின் அதிபர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும் அமைதியாக அதிபர் தேர்தல் முன்னெடுக்கப்படும். அதற்கு அமெரிக்கா உதவும் என்று கூறியிருக்கிறார்.