Categories
உலக செய்திகள்

சீன அதிபர் ஜி ஜின்பிங் மருத்துவமனையில் அனுமதி…. மூளையில் ஏற்பட்ட பாதிப்பு… வெளியான தகவல்…!!!

சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங்கின் சிறு மூளையில் இருக்கும் ரத்த நாளங்களில் பாதிப்பு உள்ளதால் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

சீன நாட்டின் அதிபர் ஜீ ஜின்பிங், கடந்த 2013 ஆம் வருடத்திலிருந்து அந்நாட்டின் அதிபராக இருக்கிறார். கொரோனா பாதிப்பு தொடங்கியது முதல் அவர் எந்த நாட்டிற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. மேலும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்படும் வரை பிற நாட்டு தலைவர்களை சந்திக்கவும் இல்லை.

இந்நிலையில் கடந்த வருட கடைசியில் அவரின் சிறு மூளையில் இருக்கும் ரத்த நாளங்களில் பாதிப்பு உண்டாகி தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு அறுவை சிகிச்சை செய்யாமல் அந்த நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |