அத்திவரதரை தரிசிக்க தனது குடும்பத்துடன் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜப் பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் அத்திவரதரை காண வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 11,20,000 பேர் அத்திவரதரை வழிபட்டு சென்றுள்ளதாக புள்ளிவிவர தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் அத்திவரதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வருகை தர இருக்கிறார். இதனை முன்னிட்டு கோவிலைச் சுற்றி 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை மீன்ம்பாக்கம் விமான நிலையத்திற்கு குடியரசு தலைவர் தனது குடும்பத்துடன் வந்தடைந்துள்ளார். தமிழகம் வந்த அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் வரவேற்றனர். சென்னை வந்தடைந்த அவர் இன்னும் சில நிமிடங்களில் ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் செல்ல இருக்கிறார்.மேலும் இன்று மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் அத்திவரதரை குடியரசு தலைவர் தரிசனம் செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.