Categories
தேசிய செய்திகள்

“மக்களால் நேசிக்கப்பட்ட தலைவரை நாடு இழந்துவிட்டது” குடியரசு தலைவர் இரங்கல்.!!

மக்களால் நேசிக்கப்பட்ட தலைவரை நாடு இழந்துவிட்டது என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  சுஷ்மா சுவராஜிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.  

முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த  சுஷ்மா சுவராஜ் (வயது 67)  கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.  இவரது உடல்நிலை மாரடைப்பின் காரணமாக மோசமானதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

Image

ஆனால் உடல் நிலை மோசமடைந்ததால்  சிகிச்சை பலனின்றி காலமானார்.  7 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ள சுஷ்மா சுவராஜ்,  இந்திரா காந்திக்கு பிறகு 2-ஆவது பெண் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்துள்ளார். இவரது மறைவுக்கு மத்திய மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Image result for ராம்நாத் கோவிந்த்

அந்த வகையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.அவர் தனது ட்விட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,பொது வாழ்க்கையில் கண்ணியம், தைரியம் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றைக் காட்டிய மிகவும் நேசித்த தலைவரை நாடு இழந்துள்ளது. மக்களால் நேசிக்கப்பட்ட தலைவரை நாடு இழந்துவிட்டது. மக்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருக்கும் சுஷ்மா ஸ்வராஜின் தன்னலமற்ற சேவைக்காக நாடு என்னும் நாடு என்றும் அவரை நினைவில் வைத்திருக்கும் என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |