Categories
தேசிய செய்திகள்

ராஜீவ் காந்தி பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா…. அனைத்துத் துறைகளிலும் முன்னிலை பெண்களே… ஜனாதிபதி பாராட்டு..!!

பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னிலை வகிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மாநில முதல்வர் எடியூரப்பா, பல்கலைக்கழக துணைவேந்தர் சச்சிதானந்தா, உயர் அதிகாரிகள், பல்கலைக்கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர்.

இந்த விழாவில் மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கியுள்ளார். இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியதாவது “இந்த பட்டமளிப்பு விழாவில் 111 பேர் தங்க பதக்கம் வென்றுள்ளனர். இவர்களில் 87 பேர் பெண் பிள்ளைகள். இது மிகப்பெரிய சாதனையாகும். இங்கு அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னிலை வகிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.  எதிர்காலத்தில் எல்லாத்துறைகளிலும் பெண்களே நம் நாட்டை வழி நடத்துவார்கள்.

அதிலும் குறிப்பாக மருத்துவத் துறையில் பெண்கள் சாதனை படைப்பார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.  இந்த விழாவில் மொத்தம் 33,629 மாணவ மாணவிகள் டிகிரி மற்றும் டிப்ளமோ பட்டம் பெற்றுள்ளனர். மேலும் பல்கலைக்கழக அளவிலான முதல் மூன்று இடங்களை மாணவிகளே பிடித்துள்ளனர். அவர்கள் தலா 3 தங்கப் பதக்கங்களை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |