Categories
உலக செய்திகள்

உயிரோடு இருக்கிறார்…” நான் போனில் பேசுவேன்”… அதிபர் டிரம்ப்!

இந்த வார இறுதியில் வட கொரிய அதிபர் கிம்முடன் டெலிபோனில் பேசுவேன்  என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு பின் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமலும், பொது வெளியில் தென்படாமல் இருந்ததால் அவர் இறந்து போய் விட்டதாகவும், கிம்முக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதன் காரணமாக எழுந்து நடக்க கூட முடியாத நிலையில் அவர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

இந்த சூழலில் தான் 20 நாட்களுக்கு பிறகு சனிக்கிழமை வட கொரிய அரசு ஊடகங்கள்  கிம் ஜாங் உன் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி தொடர்பான செய்திகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டது. இதனால் கிம் ஜாங் உன் இறந்து விட்டதாக வெளியான செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வார இறுதியில் அதிபர் கிம்முடன் தான் டெலிபோனில் பேசப்போகிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

அதிபர் டிரம்ப் வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது, சரியான நேரத்தில் நான் வடகொரிய அதிபரிடம் பேசுவேன். இந்த வார இறுதியில் சில வெளிநாட்டு தலைவர்களுடன் சந்திப்பு மற்றும் டெலிபோனில் உரையாடலை நிகழ்த்த இருக்கிறேன் என கூறினார்.

Categories

Tech |