அல்கொய்தா அமைப்பின் துணை தலைவன் குவாஸிம் அல் ராய்மி கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குவாஸிம் அல் ராய்மி (Qasim al-Raymi0) தலைமையின் கீழ் இருக்கும் அல்கொய்தாவின் அராபிய வளைகுடா பிரிவு பயங்கரவாதிகள் யேமனில் உள்ள அப்பாவி மக்களுக்கு எதிராக தீவிர வன்முறையில் ஈடுபட்டதாகவும், அமெரிக்கா மற்றும் அமெரிக்க படையினருக்கு எதிரான தாக்குதல்களை தூண்டிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தாக்குதலில் துணை தலைவன் ராய்மி கொல்லப்பட்டிருப்பது, அல்கொய்தா அமைப்புக்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த அறிவிப்பில் ராய்மி எப்படி, எங்கே வைத்து, கொல்லப்பட்டார் என்ற விவரத்தை டிரம்ப் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.