Categories
உலக செய்திகள்

17 பேர் மரணம்… ஆனால் எங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவு தான்… அதிபர் டிரம்ப்!

அமெரிக்காவில் ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு குறைவே என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இதுவரையில் ஒட்டு மொத்தமாக கொரோனாவின் கோர பிடியில் சிக்கி 3,380 பேர் இறந்துள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. சீனா முன்பை விட தற்போது கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வேகம் காட்டத்தொடங்கியுள்ளது. அதேபோல உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவையும் கொரோனா விட்டு வைக்காமல் 17 பேரை பலிவாங்கியுள்ளது. மேலும் 299 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு குறைவே என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, “ஒட்டு மொத்தமாக நோயின் தாக்கத்தை கணக்கிடும் போது அமெரிக்க மக்கள் ‘கொரோனா’ வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது குறைவு தான் என்று அவர்  தெரிவித்தார்.

Categories

Tech |