Categories
உலக செய்திகள்

“வேட்டையாடு விளையாடு”… அதிபர் டிரம்பின் மகனுக்கு அனுமதி..!!

அமெரிக்க நாட்டின் அலாஸ்கா (Alaska) வனத்தில் வாழும் கிரிஸ்லி பழுப்பு நிற கரடிகளை (Grizzly Bear) வேட்டையாடுவதற்கு  அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகன் 1000 டாலர் கட்டணம் கட்டி அனுமதி வாங்கியுள்ளார். 

ஆம், இனி அவர் காட்டுக்குள் புகுந்து விலங்குகளை வேட்டையாடலாம். அமெரிக்காவில் மான்கள், கரடிகள் மற்றும் காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்குகிறது. ஆனால் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு தான் இது பொருந்தும். அந்த வகையில் வடமேற்கு அலாஸ்காவின் சீவர்ட் (Seward) பிராந்தியத்தில் 27 இடங்களில் வேட்டையாடுவதற்கு பலரும் அனுமதி கோரி விண்ணப்பித்தனர்.

Image result for President Trump's son has  to pay a thousand  fee for hunting grizzly bears in the Alaska Forest of the United States.

இதில் டொனால்ட் ட்ரம்ப்பின் மகன் ஜூனியர் டிரம்ப்பும் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில்  ஜூனியர் டிரம்ப் உள்பட 3 பேர் வனப்பகுதிக்குள் வேட்டையாட தேர்தெடுக்கப்பட்டுள்ளதாக வனபாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். அதிபர் மகன் வேட்டையாடுவதில் மிகவும் அதிக ஆர்வம் கொண்டவர். இது தொடர்பாக அவர் பல்வேறு பயணங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |