Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டு அதிபரின் மனைவிக்கு கொரோனா…..!!

உக்ரைன் நாட்டின் அதிபர் மனைவி காரணத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றார்

உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் மனைவியான ஒலேனா ஜெலன்ஸ்கா கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒலெனா, “எனது குழந்தைகளுக்கும் கணவருக்கும் மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி ஆகிவிட்டது.

நான் நலமாக இருப்பதாய் உணர்கிறேன். என் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமலிருக்க விலகி இருந்து சிகிச்சை எடுத்து வருகின்றேன்” என பதிவு செய்தார் செய்திருந்தார். உக்ரைனில் இதுவரைக்கும் தொற்றினால் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 870 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |