கோலாகலமாக தொடங்கியுள்ள ஓணம் பண்டிகைக்கு குடியரசுத் தலைவர் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சாதி-மத பேதம் இல்லாமல் கேரள மக்களால் கொண்டாடப்படும் விழா ஓணம் பண்டிகை. இந்தப் பண்டிகை ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கி பத்தாம் நாளான இன்று திருவோண நட்சத்திரத்தில் முடிவடைகிறது. இந்தப் பண்டிகையின் சிறப்பம்சம் ஆனது தன் மக்களைத் தேடி வரும் மகாபலி மன்னனை வரவேற்க கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் அத்தப் பூக்கோலமிட்டு, புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்தும் பல வகை உணவு வகைகள் சமைத்தும் கொண்டாடுகின்றனர். எப்பொழுதும் பருவ மழைக்காலம் முடிவடைந்து கேரள மாநிலம் எங்கும் பசுமையாக காட்சி அளிக்கக் கூடிய காலத்தில் ஓணம் கொண்டாடப்படுவது வழக்கமான நடைமுறையாகும்.
இதனால் குடும்பங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. இந்த வருட பண்டிகை கொரோனா ஊரடங்குக் காலங்களில் தனி நபர் இடைவெளிகளைக் கடைபிடித்து மிகவும் கட்டுப்பாட்டுடன் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில், ” ஒத்துழைப்பு மற்றும் சகோதரத்துவத்தை வலிமைப்படுத்தி, இணக்கமும், செழிப்பும் நிறைந்த வாழ்வுக்கு வழிகாட்டும்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த விழாவிற்கு இந்திய பிரதமர் கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஓணம் பண்டிகையின் உற்சாகம் பல வெளிநாடுகள் வரை பரவியுள்ளது” என தெரிவித்துள்ளார்.