உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி ராணுவ வீரர்களை அழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 54-வது நாளாக தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. இதில் அதிக உயிரிழப்புகளும் பொருட் சேதமும் ஏற்பட்டிருக்கிறது. உலக நாடுகளும், போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், ஒவ்வொரு நாளும் போர் தீவிரமடைந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில், இந்த போரில் ஈடுபட்டிருக்கும் உக்ரைன் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதாவது எதிர்பாராமல் ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு பதக்கங்களை பரிசாக வழங்கி பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து வீரர்களிடம் அவர் பேசியதாவது, நம் நாடு மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதற்காக போரில் ஈடுபட்டு வரும் உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.