இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடக்கவுள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்கே உட்பட 3 நபர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டவுடன் அதிபர் கோட்டபாய ராஜபக்சே தன் பதவியிலிருந்து விலகினார். எனவே நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடக்கிறது. தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே மற்றும் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் டல்லஸ் அழகப்பெருமா, ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் அனுரா குமார திஸ்சநாயகே ஆகியோர் களமிறங்கி இருக்கிறார்கள்.
மேலும் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசா அதிபர் தேர்தலுக்காக தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவை வாபஸ் பெறுவதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டார். எனவே, தற்போது அதிபர் தேர்தலில் களமிறங்கியுள்ள மூன்று பேரின் வேட்புமனுக்களை முன்மொழிந்து வழிமொழிந்திருக்கின்றனர். தற்போது வாக்கு பதிவுகள் ஆரம்பமாகியுள்ளது. இதில், ரணில் விக்ரமசிங்கே தான் வெற்றியடைய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.