இந்தியாவில் உள்ள பாரத் பயோடெக் தனியார் நிறுவனத்துடன் பிரேசில் செய்த ஒப்பந்தமானது ரத்தாகியுள்ளது.
இந்தியாவில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோவக்சின் தடுப்பூசிகளை வாங்குவதற்கு பிரேசில் நாடானது அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளது. இதில் முதல் தவணையாக 4 லட்சம் கோவக்சின் தடுப்பூசிகளை பிரெகிஸா மெடிகாமென்டோஸ் நிறுவனம் மூலமாக பிரேசில் நாட்டுக்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியின் விலையானது பைசர் தடுப்பூசியைவிட அதிகமாக உள்ளது.
மேலும் கொரோனாவில் அதிகமானோர் உயிரிழந்ததற்கு தடுப்பூசி விவகாரத்தில் அதிபர் ஊழல் செய்தது தான் காரணம் என்றும் குரல்கள் எழும்பியுள்ளன. இந்த நிலையில் பிரேசில் உடனான ஒப்பந்தத்தை தடை செய்வதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே சமயம் தடுப்பூசிகளை பிரேசில் நாட்டுக்கு நேரடியாக வழங்க உள்ளதாகவும் பிரேசில் அரசுடன் இணைந்து செயல்பட எங்களுக்கு எந்தவித ஆட்சேபனை இல்லை என்றும் கூறியுள்ளது.