Categories
உலக செய்திகள்

பிரேசில் முன்னாள் கால்பந்து வீரர்…. மருத்துவமனையில் அனுமதி…. தகவல் வெளியிட்ட பீலேவின் மகள்….!!

முன்னாள் கால்பந்து வீரர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் பீலே. இவர் உடல்நலக்குறைவால் sao paulo நகரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து கடந்த வாரம் தான் உடல்நிலை சரியாகி வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் அவர்  தற்பொழுது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Football-legend-and-Former-Brazil-Player-Pele-again-admitted-in-the-intensive-care-unit

மேலும் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக தான் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பீலேவின் மகள் கெல்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். குறிப்பாக அவர் நலமுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |